TiliconVeli Tech Park · திருநெல்வேலி

உலகளாவிய வேலை. உள்ளூர் வேர்கள்.

சென்னைக்கோ பெங்களூருக்கோ போகாமலேயே IT துறையில் நல்ல வேலை. திருநெல்வேலியில், உங்கள் குடும்பத்தோடு இருந்தபடியே.

திருநெல்வேலியில் உள்ள TiliconVeli Tech Park கட்டடம்

நாங்கள் யார்?

வேலையைத் தேடி ஊரை விட்டுப் போக வேண்டாம்

TiliconVeli Tech Park 2016-ல் திருநெல்வேலியில் தொடங்கப்பட்டது. இன்று இங்கு 12 நிறுவனங்கள் இயங்குகின்றன; சுமார் 800 பேருக்கு வேலை கிடைத்துள்ளது.

உலகம் முழுவதும் உள்ள வாடிக்கையாளர்களுக்கான பணிகள் இங்கிருந்தே நடக்கின்றன. கிராமப்புறப் பெண்கள், மாற்றுத்திறனாளிகள், தென் தமிழக இளைஞர்கள் ஆகியோருக்கு IT வேலைவாய்ப்பு உருவாக்குவதே எங்கள் நோக்கம்.

“திறமையானவர்கள் வாய்ப்பைத் தேடி ஊரை விட்டுப் போக வேண்டியதில்லை. தொழில்நுட்பம் வாய்ப்பை, திறமை இருக்கும் இடத்துக்கே கொண்டு வர முடியும்.”

பிரபாகரன் முருகையா, இணை நிறுவனர் & தலைவர்
பணியிட இருக்கைகள்

யாருக்கு?

உங்களுக்கான வாய்ப்பு இங்கே

மாணவர்கள் & Freshers

Internship மற்றும் முதல் IT வேலைக்கான வாய்ப்புகள்.

வேலைவாய்ப்புகள்

ஊருக்குத் திரும்ப விரும்புபவர்கள்

சென்னை, பெங்களூரு அல்லது வெளிநாட்டிலிருந்து ஊருக்கு வர விரும்புகிறீர்களா? உங்கள் அனுபவத்துக்கு ஏற்ற வேலை இங்கே.

வேலைவாய்ப்புகள்

மீண்டும் வேலைக்குத் திரும்பும் பெண்கள்

இடைவெளிக்குப் பிறகு மீண்டும் வேலைக்கு வர விரும்பும் பெண்களை வரவேற்கிறோம்.

வேலைவாய்ப்புகள்

மாற்றுத்திறனாளிகள்

எங்கள் வளாகம் 100% சக்கர நாற்காலி அணுகக்கூடியது. நேர்காணலுக்குத் தேவையான வசதிகளைக் கேட்கலாம்.

வேலைவாய்ப்புகள்

தொழில்முனைவோர்

உங்கள் startup-ஐ எங்கள் Incubator-ல் தொடங்குங்கள்.

Incubator

நிறுவனங்கள்

திருநெல்வேலியில் அலுவலகம் அல்லது குழு அமைக்க விரும்புகிறீர்களா?

விவரங்கள் (English)

எங்கள் வளாகம்

உடனே குடியேறத் தயார்

  • அரசு பொறியியல் கல்லூரி அருகில்
  • தயாரான அலுவலகங்கள் மற்றும் இருக்கைகள்
  • மின் காப்பு (generator backup) மற்றும் இணைய வசதி
  • உணவகம், கூட்ட அரங்குகள், வாகன நிறுத்தம்
  • 100% சக்கர நாற்காலி அணுகல்

தொடர்புக்கு

வாங்க!

  • தொடர்புப் படிவம் (Contact form)
  • 22, டீச்சர்ஸ் காலனி, மீட்பர் நகர் 2-வது தெரு, அரசு பொறியியல் கல்லூரி அருகில், திருநெல்வேலி 627007
  • திங்கள் முதல் சனி, காலை 9 முதல் மாலை 7 வரை